சுடச்சுட

  

  12இல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடங்கள்

  By நாகர்கோவில்  |   Published on : 10th October 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசின் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  குமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் 2014-2015ஆம் நிதியாண்டுக்கு டிசம்பரில் வழங்கப்பட உள்ளது.

  இதற்காக சாமிதோப்பு, புலியூர்சாலை, தோவாளை, திக்கணங்கோடு, திப்பிறமலை, விளாத்துறை, பறக்கை மற்றும் தெரிசனங்கோப்பு கிராம ஊராட்சிகளிலிருந்து 890 பயனாளிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக். 12) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

  இதில் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கவும் விண்ணப்பங்களும் பெறலாம். பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்வதற்காக சாமிதோப்பு, புலியூர்சாலை, தோவாளை, திக்கணங்கோடு ஆகிய கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் அக். 24ஆம் தேதியும், திப்பிறமலை, விளாத்துறை, பறக்கை, தெரிசனங்கோப்பு ஆகிய கிராமங்களில் அக். 26ஆம் தேதியும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai