சுடச்சுட

    

    நாகர்கோவிலில் தொடங்கிய அகில இந்திய கபடி போட்டியில் மகளிர் பிரிவில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது.

    குமரி மாவட்ட கபடி கழகம் சார்பில் 8ஆவது ஆகில இந்திய ஏ கிரேடு கபடி போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது. விழாவுக்கு கபடி கழகத் தலைவர் பூபதி தலைமை வகித்தார். கபடி கழக புரவலர்கள் ஷாஜகான், தாமஸ், ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் சுபாஷ் வரவேற்றார்.

    குமரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரி காளிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

    போட்டியில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் கலந்துகொண்டன. முதல்நாள் போட்டியில், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணிக்கும், கர்நாடகம் அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்றன. இதில், கர்நாடக அணி 30-க்கு 23 என்ற புள்ளி கணக்கில் புதுச்சேரி அணியை வென்றது.

    இதைத் தொடர்ந்து, மகளிர் பிரிவில் கன்னியாகுமரி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில், கன்னியாகுமரி அணி 47 புள்ளிகளும், கொல்கத்தா அணி 46 புள்ளிகளும் பெற்றன. இதில், கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இப்போட்டிகள் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்று மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ. 1.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ. 1 லட்சமும், 3 மற்றும் 4ஆவது பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதுபோல், மகளிர் பிரிவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், 3 மற்றும் 4ஆம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai