Enable Javscript for better performance
\\\"அம்மா\\\' திட்டம்: 38 மனுக்களுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    "அம்மா' திட்டம்: 38 மனுக்களுக்கு தீர்வு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 11th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்ணமல்லி ஊராட்சியைச் சேர்ந்த ஐயர் கண்டிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்டத்தில் 38 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன.

    முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் இ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் எஸ்.துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜி.சந்திரன் வரவேற்றார்.

    தனி வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் டி.சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் முதியோர் உதவித் தொகை, சான்றிதழ் பெறுதல், குடும்ப அட்டை திருத்தல், நீக்கம் போன்ற 96 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுக்களில் 36 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. பிற மனுக்கள் பரிசீலனையில்

    உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai