சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு வருகிறது

  By நாகர்கோவில்  |   Published on : 11th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன.

  குமரி மாவட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களையும் சார்ந்த 21 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்ற விவரம் அமைச்சரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதானை, பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தும், துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டும் குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  அதனடிப்படையில் குமரி மாவட்டத்துக்கு அதிகப்படியான சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது பதிவு செய்யப்பட்டு 10 நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

  தீபாவளி பண்டிகையையொட்டி புதிய இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வரிசை அடிப்படையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்பதை 12 சிலிண்டராக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai