கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவேண்டும்
By நாகர்கோவில், | Published on : 11th October 2014 12:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகராட்சிக்குள்பட்ட கரியமாணிக்கபுரத்தில் வெள்ளிக்கிழமை பொது சுகாதாரத் துறையின் மூலம் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணியை வீடு வீடாகச் சென்று ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, அம்மி கல், கழிவு நீர் தேங்கி நிற்கும் நீரோடைகள், டயர், பழுதடைந்த கிணறு, பிளாஸ்டிக் பக்கெட்டுகள் ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா என்பதை சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், துணை இயக்குநர் எம். மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற பணியையும் ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தையும் ஆட்சியர் வழங்கினார்.
ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா, நகராட்சி ஆணையர் (பொ) சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.