Enable Javscript for better performance
சிற்றாறு அணையில் மூழ்கி இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டம், சிற்றாறு அணை 2இல் மூழ்கி, வெள்ளிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.

    தக்கலை அருகே ராமன்பறம்பு பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் ராஜ்மோகன். இவரது மகன் விஷ்ணு (29). சென்னையில் திரைப்படத் துறையில் பணியாற்றி வந்தார்.

    வெள்ளிக்கிழமை இவர், குலசேகரம் கைதப்புறம் பகுதியைச் சேர்ந்த உறவினர் நிதீஷ் (26), காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த சமீன் (25), சாபு (29) ஆகியோருடன் சிவலோகம் பகுதியிலுள்ள சிற்றாறு அணை 2-க்கு ஒரு காரில் வந்துள்ளார். பின்னர் அணையில் இவர்கள் 4 பேரும் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனராம்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக விஷ்ணு நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து, மற்ற மூன்று பேரும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் இணைந்து அணையில் இறங்கி, மூழ்கிய நிலையில் கிடந்த விஷ்ணுவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து, கடையல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai