சுடச்சுட

    

    நாகப்பட்டினத்தில் 17இல் அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு

    By நாகர்கோவில்,  |   Published on : 11th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு நாகப்பட்டிணத்தில் அக். 17ஆம் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க குமரி மாவட்டத் தலைவர் எஸ். லீடன்ஸ்டோன், செயலாளர் சி.ஆர். ராஜகுமார், மாவட்டப் பொருளாளர் யூ. சுமதி ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினத்தில் அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு, அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அக்டோபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு, தலைவர் எஸ். தமிழ்செல்வி தலைமையில் நடைபெறுகிறது.

    சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் அ. சவுந்திரராஜன் எம்.எல்.ஏ. மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலர் ரா. பாலசுப்பிரமணியன், சம்மேளன பொதுச் செயலர் முத்துசுந்தரம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai