சுடச்சுட

    

    நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பலூன்

    By நாகர்கோவில்,  |   Published on : 11th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாசகங்கள் அடங்கிய விளம்பர பலூன் வெள்ளிக்கிழமை கட்டப்பட்டது.

    வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண், 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், மாறுதல் ஆகியவற்றை மேற்கொள்ள ஏதுவாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடங்கிய விளம்பர பலூனை பறக்கவிட்டு அவர் பேசியது:

    குமரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பட்டியல் அக்டோபர் 15இல் வெளியிடப்பட உள்ளது. 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தியாகும் வாக்காளர்களின் சேர்க்கை அக்டோபர் 15 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய முன்வர வேண்டும்.

    இதற்காக விழிப்புணர்வுப் பேரணிகள், முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கோணம் பொறியியல் கல்லூரியில் இரு சக்கர வாகனம் மூலம் வாக்காளர் கடமைகளை உறுதி செய்யும்வகையில் விளம்பரப் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.

    ஆட்சியர் ஆய்வு: பின், வடசேரி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நகராட்சி மூலம் பயணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள சுத்தகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் நீரை சரி செய்யவும், பேருந்து நிலைய வளாகத்தில் ஹோட்டல் முன் பயணிகளுக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த விறகு, குப்பைகள் போன்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், கழிவறையை பார்வையிட்டு சரியான கட்டணப் பட்டியலை பொது மக்களுக்கு தெரியும்வகையில் வைக்க நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார், நகராட்சி ஆணையர் (பொ) சுரேஷ்குமார், வட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai