சுடச்சுட

    

    நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை புனித யூதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    இதில், பள்ளித் தலைமையாசிரியர் கார்மல் தலைமையில் மாணவர்கள் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு பள்ளித் தாளாளர் ஷாபின் அடிகளார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அஜிகுமார் பேரணியைத் தொடங்கிவைத்தார். பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா தடுப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாணவர்கள் அப்பகுதி கிராமங்களுக்குச் சென்று, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai