சுடச்சுட

  

  மார்பக புற்றுநோயால் 50 சதவீதம் பேர் இறப்பு

  By நாகர்கோவில்,  |   Published on : 11th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   மார்பக புற்றுநோயால் 50 சதவீதம் பேர் இறப்பதாக நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்தரங்கில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட இயக்கமும், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நிர்மலா நல்லதம்பி தலைமை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனப்பெருமாள் வாழ்த்துரை வழங்கினார்.

  முகாமில் சிகாகோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர் சுனிதா நெல்சன் சிங் பேசியதாவது: மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் அதை குணப்படுத்தி விடலாம். இதற்கு பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். புற்றுநோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்போது புற்றுநோய்க்கு மருத்துவ வசதிகள் உள்ளன. புற்றுநோயால் இறப்பவர்களில் 50 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர். மார்பில் வலியில்லாத கட்டிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகி, சோதனை செய்து கொள்வது அவசியம் என்றார்.

  முகாமில், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் லால்மோகன், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai