சுடச்சுட

    

    நாகர்கோவில் நகரப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்துவரும் முக்கடல் அணையின் மொத்த கொள்ளளவான 25 அடியை எட்டியது.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து தண்ணீர் அணைக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது பேச்சிப்பாறை அணைக்கு 145 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 249 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இரு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இதுபோல், நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்துவரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 25 அடியாக உயர்ந்தது. அணையின் முழு கொள்ளளவும் நிரம்பி உள்ளது. மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 92 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அணைக்கு கூடுதல் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளதாக நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தின் பிற இடங்களில் பதிவாகி உள்ள மழை அளவு: பேச்சிப்பாறை 4 மி.மீ, பெருஞ்சாணி 10.2 மி.மீ, நாகர்கோவில் 34.7 மி.மீ, பூதப்பாண்டி 55.5 மி.மீ, சுருளோடு 55 மி.மீ, கன்னிமார் 61 மி.மீ, மயிலாடி 17.6 மி.மீ, முக்கடல் 92 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai