சுடச்சுட

  

  குமரி மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறுகிறது.

  இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குமரி மாவட்ட பிரிவு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கேரம் விளையாட்டுப் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

  1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 1ஆவது வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் இளநிலைப் பிரிவிலும், 1.1.1997-க்கு பின் பிறந்தவர்கள் அதாவது 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் போட்டியில் பங்கேற்கலாம்.

  போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று பெயர்களை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பதிவு செய்யலாம்.

  போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் நடைபெறும்.

  இளநிலைப் பிரிவில் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 250, முன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 125 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

  முதுநிலைப் பிரிவில் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 1,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 500, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 250 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநிலப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என தெரிவித்துள்ளார் ஆட்சியர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai