சுடச்சுட

    

    அகில இந்திய கபடி: ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி சிறப்பிடம்

    By நாகர்கோவில்,  |   Published on : 12th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கபடி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

    குமரி மாவட்ட கபடி கழகம் சார்பில் நாகர்கோவிலில் அகில இந்திய ஏ கிரேடு மின்னொளி கபடி போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. 2 ஆம் நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளை பிரின்ஸ் எம்.எல்.ஏ., ரத்தினபாண்டியன், கோயில்ராஜ் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். முதலில் ஆண்கள் அணிக்கான 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை நகர போலீஸ் அணியை சென்னை ஐடெக் அணியும், கர்நாடகம் பி.டி.சி. அணியை விஜயா வங்கி அணியும், புதுச்சேரி சாய் அணியை தமிழ்நாடு போலீஸ் அணியும், மணிமுத்தாறு போலீஸ் அணியை ஐ.சி.எப். அணியும் வென்றன.

    பெண்கள் பிரிவு முதலாவது ஆட்டத்தில் கோவை சண்முகம் நினைவு அணியும், கோவை அணியும் மோதின. இதில் 62-7 என்ற புள்ளிக்கணக்கில் சண்முகம் அணி வெற்றி பெற்றது.

    அடுத்த ஆட்டத்தில் தில்லி அணியும், ரத்தினம் அணியும் மோதின. இதில் 47-8 என்ற புள்ளிக்கணக்கில் தில்லி அணி வென்றது. மற்றொரு ஆட்டத்தில் கன்னியாகுமரி அணியும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணி 44-29 என்ற புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது.

    ஆண்களுக்கான போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியும், பெங்களூரு அணியும் விளையாடின. இதில் பெங்களூரு அணியை தமிழ்நாடு போலீஸ் அணி 34.19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    தமிழ்நாடு போலீஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai