சுடச்சுட

  

  ஆதார் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தல்

  By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  இதுகுறித்து இக்கட்சியின் மாவட்டச் செயலர் என். முருகேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

  குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆதார் அடையாள அட்டையைப் பெறவில்லை.

  இந்நிலையில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பின் மீண்டும் மானியங்கள் பெற வங்கிக் கணக்கும், ஆதார் அடையாள அட்டையும் கட்டாயம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு டிசம்பருடன் அடையாள அட்டைக்கான பணி முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனால் பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவதற்காக அலைகின்றனர். மாவட்டத்தில் ஒன்றிய அளவிலும், நகர அளவிலும் ஒரு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தேவையான ஊழியர்கள் இல்லை. அதிக எண்ணிக்கையில் புகைப்படம் எடுக்கும் வசதிகளும் செய்யப்பட வில்லை.

  எனவே காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கைக் குழந்தைகளுடன் காத்திருக்கின்றனர். நாள்தோறும் 60 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுப்பதாகத் தெரிகிறது.

  எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இந்த நெருக்கடியை தவிர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி வார்டுகளிலும் தலா ஒரு சிறப்பு முகாம் அமைத்து அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை கிடைக்க வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai