சுடச்சுட

    

    ஆரல்வாய்மொழி: இரு கடைகளில் பணம்,பொருள்கள் திருட்டு

    By நாகர்கோவில்,  |   Published on : 12th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரல்வாய்மொழியில் இரு கடைகளில் பூட்டை உடைத்து பொருள்கள் மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (38). இவர், பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு அவர் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

    இந்நிலையில் அவர் சனிக்கிழமை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 விலை உயர்ந்த செல்போன்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் உள்ளிட்ட பொருள்களும், ரூ.10ஆயிரமும் திருடுபோனது தெரியவந்தது.

    மேலும், இவரது கடைக்கு அருகே சுந்தர்ராஜன் (43) என்பவர் நடத்திவரும் பழக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ. 1200 மற்றும் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai