சுடச்சுட

  

  குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்

  By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

  இதுகுறித்து அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை புதன்கிழமை சந்தித்து, குமரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார்.

  கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளைக் கொண்ட நவீன இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகப் பிரிவு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்க்கான சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் மருத்துவப் பிரிவு ஆகியவற்றை கொண்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai