Enable Javscript for better performance
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

    By கன்னியாகுமரி  |   Published on : 12th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்ற பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.விஜயகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.கருப்பன், பொதுச்செயலர் எல்.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் டி.சதிஸ்குமார் வரவேற்றார்.

    பார்வையற்ற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் அரசுப் பணியில் இருபது ஆண்டுகள் பணிபுரிந்தாலே அவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். முறையில் இருந்து முன்பிருந்த ஜி.பி.எப். முறை மீண்டும் தொடர அரசிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். பார்வையற்ற கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்குவதுபோல் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து 120 பார்வையற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai