சுடச்சுட

  

  திமுக இளைஞரணி சார்பில்பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி

  By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அண்ணா பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் பள்ளி மாணவர், மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் தலைமை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சந்திரா, பூதலிங்கம்பிள்ளை, ராஜேஷ்குமார், செந்தில்முருகன், ஜெயசந்திர பூபதி, மதன், நகரச் செயலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திமுக மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன், இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் சுபா. சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ரெஜினார்டு, முன்னாள் எம்.பி.க்கள் ஹெலன் டேவிட்சன், ஆஸ்டின், புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், திமுக அவைத் தலைவர் ஜோசப்ராஜ், துணைச் செயலர் ஜோசப் ராஜ், ஒன்றியச் செயலர்கள் தாமரைபாரதி, நெடுஞ்செழியன், மனோதங்கராஜ், வழக்குரைஞர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் திரளாக இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.

  போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000-மும்

  வழங்கப்பட உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai