நாகர்கோவில் கல்லூரியில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்கம்
By நாகர்கோவில், | Published on : 12th October 2014 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் "தூய்மை இந்தியா' திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் எஸ்.பெருமாள் முன்னிலையில் நாகர்கோவில் நகர்மன்றத் தலைவர் எம். மீனாதேவ் "தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது மாணவர், மாணவிகள் தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கல்லூரி ஆட்சிக்குழு துணைத் தலைவர் கோபாலன், பொருளாளர் மகாராஜா பிள்ளை, இயக்குநர் தங்கப்பன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வீ.வேணுகுமார், மகேஷ், தே.நாகலட்சுமி, மாணவர், மாணவிகள் செய்திருந்தனர்.