சுடச்சுட

    

    நாகர்கோவில் நகராட்சிப் பூங்காவை சீரமைக்க கோரிக்கை

    By நாகர்கோவில்,  |   Published on : 12th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் நகராட்சிப் பூங்காவை சீரமைக்க வேண்டும் என கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

    நாகர்கோவிலில் இம்மையத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் எம். தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

    பொதுச்செயலர் டி.சிதம்பரம், பொருளாளர் பி.சொரிமுத்து, துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், பி.பெருமாள், ஆர். ஷெலின்மேரி, இணைச் செயலர் சி. வேலாயுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் நகராட்சிப் பூங்காவைச் சீரமைக்க வேண்டும், கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் இடநெருக்கடியால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை வாரத்தின் அனைத்து நாள்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அரசின் அனுமதி பெறாமல், தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. எனவே இந்த விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai