சுடச்சுட

    

    நித்திரவிளை அருகே1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By களியக்காவிளை  |   Published on : 12th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நித்திரவிளை அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவக் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கடற்கரையோரம் நாட்டுப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மீன் வலைகளுக்கு அடியில் சாக்கு மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் மர்மநபர்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai