Enable Javscript for better performance
முழுக்கோட்டில் கலை, அறிவியல் கல்லூரி: ஒய்.எம்.சி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    முழுக்கோட்டில் கலை, அறிவியல் கல்லூரி: ஒய்.எம்.சி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

    By கன்னியாகுமரி  |   Published on : 12th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம், முழுக்கோட்டில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது என சனிக்கிழமை நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேசிய ஒய்.எம்.சி.ஏ. நிர்வாக குழுக் கூட்டம் மார்த்தாண்டம் நிர்வாக கமிட்டித் தலைவர் அசோகன்சாலமன் தலைமையில் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. கட்டடத்தின் மேல்மாடியில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தங்கும் அறைகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முழுக்கோட்டில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் செயல்பட்டு வரும் தேன் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்த வேண்டும். முழுக்கோட்டில் 50 ஆதரவற்ற சிறுவர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சிறுவர் இல்லத்தை பராமரிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், தேசிய செயலர் ஜி.சுந்தர்சிங், தென்பிராந்திய செயலர் வின்சென்ட் மிராண்ட், மார்த்தாண்டம் நிர்வாகச் செயலர் ஏ.மனோகர் சேம், உதவித் தலைவர் எஸ்.ஜோஸ்ரோபி வில்சன், பொருளாளர் எம்.ஜெயநேசகுமார், நிர்வாகிகள் ஜி.ஜே.முத்துராம், ராஜேஷ் விசுவாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai