Enable Javscript for better performance
ரயில் நிலைய மருத்துவமனையை முழுநேரமாக செயல்படுத்த வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் நிலைய மருத்துவமனையை முழுநேரமாக செயல்படுத்த வலியுறுத்தல்

    By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் செயல்படும் மருத்துவமனையை முழுநேரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    குமரி மாவட்ட ரயில்வே ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கண்ணன் பூபதி வரவேற்றார். திருவனந்தபுரம் கோட்ட உதவி தனி அலுவலர் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகுதி நேரமாக இயங்கும் மருத்துவமனையை முழுநேரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai