சுடச்சுட

    

    வடசேரி பேருந்து நிலையத்தின் வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்

    By நாகர்கோவில்  |   Published on : 12th October 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் வெளியே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் உள்பகுதியில் காலியாக இருந்த வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

    வடசேரி பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன.

    இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சாலையில் பிற வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டது.

    இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை இப்பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்த்தார்.

    இதையடுத்து பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்தையும், காவல்துறையையும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து போலீஸார் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை பேருந்து நிலையத்தின் உள்பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். இதையடுத்து சாலையில் தடையின்றி வாகனங்கள் செல்கின்றன. பின்னர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்பதற்கான அறிவிப்பு பலகையை போலீஸார் அங்கு வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai