சுடச்சுட

  

  களக்காடு அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியதாக மனைவி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  களக்காடு அருகேயுள்ள இடையன்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் தேவதாஸ் (34). சேரன்மகாதேவியில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜமீலா (30). இவர்களுக்கு சாலமன்எடிசன் (8), ஆண்ட்ரோ சிபிசன் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இத்தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  ஜமீலா அதே ஊரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தேவதாஸýக்கும், ஜமீலாவின் சகோதரி தர்மக்கனிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை (அக்.10) தேவதாஸ் தனது மகன்களை சந்தித்துப் பேச வேண்டும் என மனைவி ஜமீலாவிடம் கேட்டாராம்.

  அப்போது அங்கு வந்த ஜமீலாவின் சகோதரி தர்மக்கனி, அவரது மகன் ராஜா, உறவினர் பத்மா ஆகிய 3 பேரும் சேர்ந்து தேவதாûஸ அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தினராம்.

  இதையடுத்து தேவதாஸ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸார் வழக்குப் பதிந்து ஜமீலா, தர்மக்கனி, ராஜா, பத்மா ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai