சுடச்சுட

  

  கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

  By கருங்கல்,  |   Published on : 13th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முள்ளூர்துறையில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

  தேங்காய்ப்பட்டினம், முள்ளூர்துறை, அரையன்தோப்பு, இனயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதத்துக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தேங்காய்ப்பட்டினம் - இனயம் கடற்கரை சாலை சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கடல் அலை தடுப்புச் சுவர் பகுதிகளில் கடலுக்குள் கல்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

  இதில், மாவட்ட மீன்பிடிதுறைமுக செயற்பொறியாளர் மலையரசன், உதவிச் செயற்பொறியாளர் பாலமுரளி, மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரூபர்ட் ஜோதி, உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன், குமரி மீனவர் பேரவைத் தலைவர் ஜோர்தான், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் மகேஷ், பங்கு அருள்பணியாளர்கள் ராஜ், ஆன்றோ, நடராஜன் உள்ளிட்ட மீனவப் பிரதிநிகள் பலர் பங்கேற்றனர்.

  தேங்காய்ப்பட்டினம் - முள்ளூர்துறை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai