சுடச்சுட

  

  கன்னியாகுமரியில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு

  By கன்னியாகுமரி,  |   Published on : 13th October 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மாவட்ட ஜம்மியத்துல் அஹ்லிக் குர்ஆன் வல்ஹதீஸ் ஆகியவை இணைந்து நடத்திய முஸ்லீம் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  நாகர்கோவில் அரபிக் கல்லூரி முதல்வர் செய்யது அலி பைஸி தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகிகள் நூர்முகம்மது, அப்துல்காதர், இப்ராஹிம், அப்துல் மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி தவ்ஹீத் பள்ளி இமாம் இப்ராஹிம் கிராஅத் ஓதினார். கிளைத் தலைவர் கலாம் வரவேற்றார்.

  அனைவரிடத்திலும் சமுதாய ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஆபாசத்தையும், ஒழுக்கக்கேட்டையும் எதிர்க்க வேண்டும். மது மற்றும் போதை பொருள்களை அடியோடு அப்புறப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டும்.

  மனிதர்களிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் அப்துல்காதர் மதானி, துணைத் தலைவர் அன்சர் உசேன், மாவட்டத் தலைவர் முகம்மது ரபீக், செயலர் முகம்மது ஹாமீம், பேராசிரியர் காஜாமுகைதீன் உள்ளிட்டோர் பேசினர். கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் மீரான் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai