Enable Javscript for better performance
கொல்கத்தா இளைஞர் கொலையில் மேற்கு வங்க தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    கொல்கத்தா இளைஞர் கொலையில் மேற்கு வங்க தொழிலாளி கைது

    By நாகர்கோவில்  |   Published on : 13th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரல்வாய்மொழியில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    கொல்கத்தா முர்சிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ் (30). இவர் ஆரல்வாய்மொழி குருசடி பகுதியில் தங்கியிருந்து செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார்.

    பி.ஏ. வரை படித்திருந்த இவர், டியூசன் ஆசிரியராக இருந்து செங்கல்சூளையில் வேலை செய்யும் குழந்தைகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்து வந்தார்.

    கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இவர் தலையில் பலத்த காயத்துடன் வீட்டில் கிடந்தார். அங்குள்ளவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செப்டம்பர் 29ஆம் தேதி சிகிச்சையில் இருந்த சுதிப் பிஸ்வாஸ் இறந்தார்.

    ஆரல்வாய்மொழி போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து, மேற்கு வங்கத்தில் இருந்து செங்கல் சூளையில் வேலை செய்துவந்த லூயிஸ் சர்தார், அவரது மனைவி சரளா சர்தார் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆரல்வாய்மொழி குருசடி பகுதியில் நின்ற லூயிஸ் சர்தாரை (32) போலீஸார் கைது செய்தனர். தன் மனைவியிடம் தொடர்பு வைத்திருந்ததால் சுதிப் பிஸ்வாûஸ கம்பியால் தாக்கி கொலை செய்ததாக அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai