Enable Javscript for better performance
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: கையெழுத்து இயக்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: கையெழுத்து இயக்கம் தொடக்கம்

    By நாகர்கோவில்,  |   Published on : 13th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மெரீனா கடற்கரையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி அரசை வலியுறுத்தி நாகர்கோவிலில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, காமராஜர் நற்பணிமன்றத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் சிவாஜி சமூகநலப் பேரவை மாநிலத் தலைவர் கே. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

    மாவட்டத் தலைவர் என். கண்ணன், மாநிலச் செயலர் பி. சேகர், நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் அலெக்ஸ், பாஜக வர்த்தக அணி மாவட்டத் தலைவர் பி. முத்துராமன், பிரபு மன்றத் தலைவர் டி. ஜெயபாலன், காங்கிரஸ் நகரச் செயலர் பொன். செல்வமணி, நற்பணி மன்ற இளைஞரணித் தலைவர் எஸ். ராம்குமார், விவசாய அணி மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன், மாவட்ட பொதுச் செயலர் இனியன்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai