சுடச்சுட

    

    திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் கருடசேவை

    By களக்காடு,  |   Published on : 13th October 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் சனிக்கிழமை இரவு (அக்.11) நடைபெற்ற கருடசேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் நம்பியாற்றில் நீராடிவிட்டு கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்தனர். காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

    இரவு கருடசேவை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தைச் சுற்றி வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai