சுடச்சுட

    

    பழுதாகி நின்ற பேருந்தால் போக்குவரத்து நெரிசல்

    By களியக்காவிளை  |   Published on : 13th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பெரும்பாலான தடங்களில் காலாவதியான மற்றும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இப் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், பழுதாகி நடுவழியில் நிற்பதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொல்லங்கோட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

    இப் பேருந்து களியக்காவிளை சந்திப்பில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே வந்த போது திடீரென இயங்காமல் நின்றது. இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் கேரள மாநிலப் பகுதிகளிலிருந்து களியக்காவிளை வந்த பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குள் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் கேரளத்திலிருந்து மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து பணிமனை ஊழியர்கள் வந்து பழுதை சரிசெய்தனர். பேருந்து பழுது காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai