சுடச்சுட

    

    பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

    By நாகர்கோவில்,  |   Published on : 13th October 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    நாகர்கோவிலில் பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்க கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. தியாகி கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். தேசியத் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை, பொதுச் செயலர் பி.எஸ். ராமசாமி பிள்ளை, அமைப்பைச் செயலர் பி.எஸ். வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் தெ.வே. பகவதிப்பெருமாள் வரவேற்றார். உறுப்பினர் எஸ். சிவன்பிள்ளை அறிக்கை வாசித்தார். உறுப்பினர் பி. நாகேந்திரபிள்ளை புதிய நிர்வாகிகள் பட்டியலை படித்தார்.

    தலைவராக கோ. முத்துக்கருப்பன், துணைத் தலைவராக தெ.வே. பகவதிப்பெருமாள், செயலர்களாக ஏ.வி. சண்முகம், நீல. நரேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளராக எஸ். குமாரசுவாமி பிள்ளை, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ். தாணுமூர்த்தி, ஆ.எம்.எஸ். பிள்ளை, பி. நயினார், பி. நாகேந்திரன் எஸ். சிவன்பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக இ. சொக்கலிங்கம், செயலர்களாக கே. சுப்பிரமணிய பிள்ளை, ஏ. சங்கரன்பிள்ளை, துணைத் தலைவர்களாக சி கோபாலகிருஷ்ணன், ஏ. செல்லையாபிள்ளை, பொருளாளராக பி. நாகேந்திர பிள்ளை, அமைப்புச் செயலர்களாக எஸ். நாகராஜன், என்.நீலகண்டன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    டிசம்பர் 3 ஆம் தேதி சங்கத்தின் 10 ஆவது ஆண்டு விழாவை நடத்தி அதில் 2013-2014 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு விருது வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai