Enable Javscript for better performance
மலையோரப் பகுதி விவசாய நிலங்களை சூழியல் உணர்ச்சிமிகு மண்டலமாக அறிவிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மலையோரப் பகுதி விவசாய நிலங்களை சூழியல் உணர்ச்சிமிகு மண்டலமாக அறிவிக்க முயற்சி

    By குலசேகரம்  |   Published on : 13th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதி விவசாயிகளின் பட்டா நிலங்களையும், குடியிருப்புகளையும் சூழியல் உணர்ச்சிமிகு மண்டலமாக (உஸ்ரீர் நங்ய்ள்ண்ற்ண்ஸ்ங் ழர்ய்ங்) அறிவிப்பதற்கு வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடையாலுமூட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வழக்குரைஞர் எஸ். நெல்சன் தலைமை வகித்தார். செயலர் சி. பாலசந்திரன் நாயர், வழிகாட்டி பேராசிரியர் ஏ. ஜார்ஜ் ஸ்டீபன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ. அகஸ்டின், ஏ. லூயிசன், கேசவன் குட்டி, பல்த்தசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு காடுகளை 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்பு சரணாலயமாக அரசு அறிவித்தது. அதன் தொடர் நடவடிக்கையாக வன விலங்குகள் நடமாடக்கூடிய இடங்கள் (ஆன்ச்ச்ங்ழ் ழர்ய்ங்) என விவசாய விளை நிலங்களான பட்டா நிலங்களையும், மக்கள் நெருக்கமாக குடியிருக்கும் பகுதிகளையும், சூழியல் உணர்ச்சிமிகு மண்டலத்திற்குள் கொண்டு வருவதற்காக வனத்துறை அதிகாரிகள் குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் அமைந்துள்ள கிராம அலுவலகங்களில் சென்று ஆவணங்களின் நகல்களை பெற்று அப்பகுதிகளை சூழியல் உணர்ச்சிமிகு மண்டலம் என அறிவிக்கும் வகையில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டால் குறிப்பிட்ட பகுதிக்குள் வரும் பட்டா விளை நில விவசாயிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்.

    விவசாயிகளின் பட்டா நிலங்களையும், குடியிருப்புகளையும் சூழியல் உணர்ச்சிமிகு மண்டலம் என வரையறை செய்யும் முன் பாதிப்பிற்குள்ளாகும் மக்களையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் கருத்தை கேட்காததும், 2006 வன உரிமைச் சட்டப்படி கிராம சபையின் அனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். அரசின் இந்த முயற்சியை குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

    மேலும் இப்பிரச்னை தொடர்பாக சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கும், தமிழ் நாடு வனத்துறைக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பவும், போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai