சுடச்சுட

  

  முள்ளங்கனாவிளை ஊராட்சியில் ஆதார் அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை

  By கருங்கல்,  |   Published on : 13th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் உடனடியாக புகைப்படம் எடுத்து ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள மனு: கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொல்லஞ்சி, நட்டாலம், முள்ளங்கனாவிளை, திப்பிரமலை, பாலூர், மிடாலம், மத்திகோடு, இனயம் புத்தன்துறை ஆகிய 8 ஊராட்சிகள் உள்ளன. இதில் முள்ளங்கனாவிளை ஊராட்சியை தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் ஆதார் அடையாள அட்டை எடுத்து வழங்கப்ப்பட்டுள்ளது.

  ஆனால், கடந்த ஒராண்டாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினரிடம் இவ் ஊராட்சியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தும் இதுநாள்வரை அதற்கான பணி நடைபெறவில்லை.

  இதனால்,பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே,பொதுமக்கள் நலன் கருதி முள்ளங்கனாவிளை ஊராட்சியில் உடனடியாக ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai