Enable Javscript for better performance
7 மையங்களில் ஊரக திறனாய்வுத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு குமரி மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஊரக பகுதி மாணவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் ஊரக திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 8 ஆம் வகுப்பு தேர்வில் 50 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று தற்போது 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்நிலையில் இத்தேர்வு குமரி மாவட்டத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. நாகர்கோவில், குழித்துறை கல்வி மாவட்டங்களில் தலா 2 மையங்களும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 3 மையங்கள் என 7 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 2335 மாணவர், மாணவிகள் தேர்வு எழுதினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai