சுடச்சுட

  

  அகில இந்திய கபடி: ஆண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிக்கு கோப்பை

  By நாகர்கோவில்,  |   Published on : 14th October 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய ஏ கிரைடு கபடி போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆண்கள் பிரிவில் தென்மத்திய ரயில்வே அணியும், மகளிர் பிரிவில் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்றன.

  குமரி மாவட்ட கபடி கழகம் சார்பில், அகில இந்திய ஏ கிரேடு கபடிப் போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா முழுவதுமிருந்து 25 அணிகள் பங்கேற்றன. போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அரையிறுதிப் போட்டியும், தொடர்ந்து மாலை இறுதிப் போட்டியும் நடைபெற்றன.

  போட்டிகளை கூடங்குளம் அணுமின் நிலைய துணை பொதுமேலாளர் அன்புமணி, ரங்கபாய் சதாசிவம், சுரேந்திரகுமார், சின்னையா உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில், தென்மத்திய ரயில்வே அணியும், சென்னை ஐடெக் அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், தென் மத்திய ரயில்வே அணி 24-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

  தொடர்ந்து, மகளிருக்கான அரையிறுதிப் போட்டியில் கோவை அவனாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும், தில்லி பாலம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

  இறுதிப் போட்டியில், கோவை அணி 35-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

  தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆண்கள் பிரிவில், வெற்றி பெற்ற தென் மத்திய ரயில்வே அணிக்கு, முதல் பரிசாக ரூ. 1.50 லட்சமும், சுழல்கோப்பையும் வழங்கப்பட்டது. 2ஆவது பரிசாக ஐடெக் அணிக்கு ரூ. 1 லட்சமும், 3 மற்றும் 4ஆம் இடங்களைப் பிடித்த அணிக்கு, தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டன.

  மகளிர் பிரிவில் கோவை அணிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2ஆவது பரிசாக தில்லி அணிக்கு ரூ. 75 ஆயிரமும், 3 மற்றும் 4ஆம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டன.

  பரிசுகளை தடிக்காரன்கோணம் ரூபன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரூபன் வழங்கினார். நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கபடி கழகத் தலைவர் பூபதி, செயலர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai