சுடச்சுட

    

    அஞ்சல் வார விழா: விநாடி- வினாவில் குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளி முதலிடம்

    By நாகர்கோவில்  |   Published on : 14th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஞ்சல் வார விழா, விநாடி- வினா போட்டியில் குளச்சல் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பரிசை வென்றது.

    தேசிய அஞ்சல் வார விழா, நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, தபால் தலை சேகரிப்பு மற்றும் தபால் தலைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், அஞ்சல் துறை தொடங்கிய நாளிலிருந்து உள்ள அரிய வகை தபால் தலைகள் மற்றும் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதை, மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கான அஞ்சல் தலை குறித்த விநாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில், முதல் பரிசு குளச்சல் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிக்கும், இரண்டாவது பரிசு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பெல்பீல்டு மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், மூன்றாவது பரிசு நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளியும் பெற்றன.

    பெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் டி. செல்வராஜ் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அஞ்சல் துறை உதவி கண்காணிப்பாளர் யு. வசந்தாõசிந்து தேவி மற்றும் எஸ். சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai