சுடச்சுட

  

  அரசுப் பள்ளி விடுதி சமையல் கூடத்தில் தீ: சமையலர் பலத்த காயம்

  By குலசேகரம்,  |   Published on : 14th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம், பத்துகாணி அரசுப் பள்ளி விடுதியில் சமையல் செய்தபோது தீ பரவியதில், அங்கு பணிபுரிந்த சமையலர் பலத்த காயமடைந்தார்.

  பத்துகாணியில் அரசு பழங்குடியினர் உண்டுறை மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி விடுதியில், மேல்புறம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (50) சமையலராகப் பணிபுரிந்து வருகிறார்.

  திங்கள்கிழமை காலையில் இவர் வழக்கம்போல் சமையல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சமையல் எரிவாயு உருளையின் இணைப்பிலிருந்து திடீரென்று தீ வெளிப்பட்டு, அர்ஜுனன் மீது பரவியதாகக் கூறப்படுகிறது.

  இதில், பலத்த காயமடைந்த அர்ஜூனன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, ஆறுகாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai