Enable Javscript for better performance
ஆசிரியர் இயக்கங்கள் தொடர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் திங்கள்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு அமைப்பாளர் ஜெரோம் தலைமை வகித்தார். நிதிக் காப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், செய்தி தொடர்பாளர் நாகராஜன், இணை அமைப்பாளர்கள் பாலசந்தர், வேலவன், செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், தவசிமுத்து, எட்வின் பிரகாஷ், விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து விதிகள், நடைமுறைகள், மரபுகளை புறக்கணித்து செய்யப்பட்ட 2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தைக் கண்டித்தும், பொதுக் கல்வியை சீரழிக்கும் கல்வித் துறையைக் கண்டித்தும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai