Enable Javscript for better performance
கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள் அவதி

    By கருங்கல்  |   Published on : 14th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து கருங்கல், பள்ளியாடி, கிள்ளியூர் மின் விநியோகப் பிரிவில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாதாந்தர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்தடை ஏற்படுவது வழக்கம்.

    ஆனால், வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒருவாரமாக அறிவிக்கப்படாமல், திடீரென காலை அல்லது மாலை என 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் சிறு தொழில் செய்வோர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    குறிப்பாக ஜெராக்ஸ், கணினி மையங்கள், வெல்டிங் தொழிற்கூடம், அரவை மில், பிரின்டிங் பிரஸ் உள்ளிட்டவை தொழில்கள் பாதிப்படைகின்றன. எனவே,பொதுமக்கள் நலன் கருதி, கருங்கல் பகுதியில் ஏற்படும் மின்வெட்டை சீரமைக்க மின்சாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai