சுடச்சுட

  

  சர்வதேச இயற்கை பேரிடர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் கால ஒத்திகை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  பள்ளி, கல்லூரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மாணவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். (படம்)

  ஒத்திகை தொடங்கிய போது, பள்ளி வகுப்பறையில் தீ விபத்து ஏற்பட்டதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பிய பெற்றோர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பள்ளி வளாகம் முன் குவிந்தனர். சிலர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின், இது ஒத்திகை முகாம் என தெரிந்ததும் அவர்கள் நிம்மதியுடன் திரும்பினர். பேரிடர் ஒத்திகை குறித்து பெற்றோருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்காததால் இவ்வாறு திடீர் பரபரப்பு ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவான் உத்தரவின்பேரிலும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் மேற்பார்வையிலும் நடைபெற்ற இந்த ஒத்திகை முகாமில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் 16 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 108 ஆம்புலன்ஸ் மற்றும் 2 தனியார் ஆம்புலன்ஸ்களும் ஒத்திகையில் பங்கேற்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai