Enable Javscript for better performance
குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து: பயணிகள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து: பயணிகள் காயம்

    By குலசேகரம்  |   Published on : 14th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து திங்கள்கிழமை சாலையோரப் பள்ளத்தில் சரிந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட பயணிகள் காயமடைந்தனர்.

    அருமனையிலிருந்து, நாகர்கோவிலுக்கு தடம் எண் 318 அரசுப் பேருந்து பள்ளி மாணவ, மாணவியர் உள்பட சுமார் 50 பேருடன், திங்கள்கிழமை காலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஈஞ்சக்கோடு அருகே மொட்டைக்காலை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மின்கம்பம் ஆகியவற்றை மோதித் தள்ளிவிட்டு, அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சரிந்து நின்றது.

    இதில், பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்தவர்கள் குலசேகரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மேல்புறத்தைச் சேர்ந்த ஜோஸ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai