சுடச்சுட

    

    செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா

    By நாகர்கோவில்,  |   Published on : 14th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் திருச்செந்தூர் திருகுமரா சி.டி. வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

    விழாவுக்கு, நிறுவனர்- தலைவர் புலவர் வே. ராமசாமி தலைமை வகித்தார். கொட்டாரம் கம்பன் கழகத் தலைவர் ஜோதி அரவிந்தன் வரவேற்றார். பேரவையின் துணைச் செயலர் எஸ். அன்பழகன் அறிக்கை வாசித்தார். காந்தி ஜெயந்தி விழா குறித்து ஹோலிகிராஸ் கல்லூரியின் முன்னாள் பேராசிரியை ப. கஸ்தூரி உரையாற்றினார்.

    முனைவர் வி.ஜி. அனந்தாவின், திருச்செந்தூர் திருகுமரா என்ற குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. பொறுப்பாளர்கள் முத்துக்குமார், மாதவ ஐயப்பன், டாக்டர் சிதம்பர நடராஜன், சொக்கலிங்கம், நவசிவாயம், ஹரிபாலு, ஜெயக்குமார்பிள்ளை ஆகியோர் குறுந்தகடை பெற்றனர். இதில், வழக்குரைஞர் எஸ். ராஜகோபால், ராஜ்குமார், குறளகம் நிறுவனர் தமிழ்க் குழவி, திமில் இயக்கத் தலைவர் தமிழ்ச் செல்வன், குமரி எழிலன், டார்வின் ரமேஷ், எல். பகவதிபெருமாள், தெய்வநாயகபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புலவர் மு. சிவதாணு நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai