சுடச்சுட

    

    ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம்

    By நாகர்கோவில்,  |   Published on : 14th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை சார்பில், ரத்த கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, இளைஞர் பாசறைத் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் என். தளவாய்சுந்தரம் ரத்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

    நாஞ்சில் ஏ. முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் சதாசிவம், அணிச் செயலர்கள் அசோகன், காரவிளை செல்வன், நகரச் செயலர் சந்திரன், நகர அவைத் தலைவர் மகாதேவன், பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், சகாயராஜ்,

    இளைஞர் பாசறை நிர்வாகிகள் அக்ஷ்ய கண்ணன், ஜான்சிலின் விஜிலா, தொகுதிச் செயலர் சுகுமாரன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் பொன். சுந்தர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    களியக்காவிளை: அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமையில் நடைபெற்ற மும்மத பிரார்த்தனையில், முதலில் மூவோட்டுக்கோணம் பத்ரகாளி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

    தொடர்ந்து செங்கவிளை முகைதீன் பள்ளிவாசலில் பிரார்த்தனை நடைபெற்றது. இதையடுத்து களியக்காவிளை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கட்சியின் மேற்கு மாவட்ட துணைச் செயலர் கே.ஏ. சலாம், இணைச் செயலர் மேரி கமலபாய், பொருளாளர் நாஞ்சில் டொமினிக், மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் அருள்பிரகாஷ், இளைஞரணிச் செயலர் மார்ட்டின்ஜோஸ், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர் எப். பிராங்கிளின், மருத்துவர் அணிச் செயலர் ஆல்பர்ட், ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜீன்ஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் வி. நசீர், மகளிரணி இணைச் செயலர் லெபரன்சியாள், ஒன்றிய அதிமுக செயலர்கள் கருணாகரன் (மேல்புறம்), மைதீன் (முன்சிறை), ஜார்ஜ் (கிள்ளியூர்), மேல்புறம் ஒன்றிய துணை செயலர் ஆல்பர்ட்சிங், களியக்காவிளை பேரூர் செயலர் ஜி. அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கருங்கல்: வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது.

    கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ஜார்ஜ், முன்சிறை ஒன்றியச் செயலர் மைதீன், மாவட்ட இணைச் செயலர் மேரி கமலபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், துணைச் செயலர் சலாம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜீன்ஸ், எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் நீரோடி ஸ்டீபன்,புதுக்கடை பேரூர் செயலர் வெற்றிவேந்தன், கிருஷ்ணன், செல்வராஜ், ஜேம்ஸ், அந்தோனிபிச்சை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai