சுடச்சுட

    

    தாழக்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர் வீட்டின் பின்பகுதியில் இருந்து ரத்த அணலி என்ற ஒரு வகை பாம்பை வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர்.

    தாழக்குடி பேரூராட்சி 4ஆம் வார்டு உறுப்பினர் பிரியதர்ஷினி. இவர், வீட்டின் பின்பகுதியில் பூச்செடிகள் வளர்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை பூச்செடிகளுக்கு இடையே ரத்த அணலி என்ற ஒரு வகை பாம்பு கிடந்தது. இதுகுறித்து பேருராட்சி தலைவர் ரோகிணி ஐய்யனுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வன ஊழியர் சுந்தரதாஸ் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai