Enable Javscript for better performance
நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா- Dinamani

சுடச்சுட

    

    நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா

    By நாகர்கோவில்  |   Published on : 14th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது.

    வைகுண்டசுவாமி தர்ம பிரஜாரண சபை நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த தர்னாவுக்கு தலைவர் விஷ்ணுபுரம் சந்திரசேகரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.

    மாநிலத் தலைவர் செல்வராஜ், செயலர் பிபின்ஜோஸ், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், மாவட்டத் தலைவர் ஷென்குமார், பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்டச் செயலர்கள் முருகேஷ், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், அய்யா வைகுண்டசாமி சமூக மறுமலர்ச்சி வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai