சுடச்சுட

  

  கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி புனித நிக்கோலஸ் உயர்நிலைப் பள்ளியில் பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

  சர்வதேச பேரிடர் தணிப்பு நாளையொட்டி, மாவட்ட கோட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியம் உத்தரவுப்படி, கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அதிகாரி முத்துராமன் தலைமையில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு எவ்வாறு முதலுதவி அளிக்கவேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

  இதில், 108 ஆம்புலன்ஸ் பிரிவில் இருந்து மருத்துவ டெக்னீஷியன் ஜெனீபா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆல்பர்ட், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் பத்ரகிரி, வில்பிரட் மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில், இதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai