சுடச்சுட

    

    சுகாதாரகேட்டைக் கண்டித்து, பூதப்பாண்டியில் பாஜக சார்பில் காகித கப்பல் விடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    பூதப்பாண்டி பேருராட்சி 10ஆவது வார்டு, காந்திநகர் பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேட்டை விளைவிப்பதாகக் கூறி, பாஜகவினர் காகித கப்பல் விடும் நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்தை பாஜக மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி தொடங்கிவைத்தார். வர்த்தகர் அணித் தலைவர் முத்துராமன், வரவேற்புக்குழுத் தலைவர் ராஜன், கிளைத் தலைவர் கிறிஸ்டல், ஒன்றிய பொதுச் செயலர் மணி சுவாமி, ஒன்றியத் தலைவர் கிருஷ்ணன், கேந்திர தலைவர் விஜயமணியன், நிர்வாகிகள் முத்துராஜ், சிவகுமார், தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai