சுடச்சுட

    

    பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

    By நாகர்கோவில்,  |   Published on : 14th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தொடங்கிவைத்தார். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் சுஜிபிரேமலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணியில் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

    பேரணி பாலமோர் சாலை வழியாக மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அசிசி வளாகத்தைச் சென்றடைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai