சுடச்சுட

  

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை.ôக வேண்டி, பத்மநாபபுரம் நகர அதிமுக சார்பில் மும்மத பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

  பத்மநாபபுரம் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு நீலகண்டசுவாமி திருக்கோயிலிலும், அரண்மனை சாலையில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திலும், தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்ஹாவிலும் அதிமுகவினர் மும்மத பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் நகரச் செயலர் ஏ.எஸ்.ஜெகபர்சாதிக் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி, துணைத் தலைவர் பீர்முகம்மது, மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், துணைச் செயலர் கே.ஏ.சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியச் செயலர் ஜார்ஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai